• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனை விரும்பாத இளையராஜா...  அண்ணாதுரை கண்ணதாசன் தகவல்

சினிமா

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை பாடலாக கொடுத்து பல தத்துவ பாடல்களை மக்கள் மத்தியில் விதைத்தை பெருமைக்கு சொந்தக்காரர் கவியரசர் கண்ணதாசன்.

இந்திய சினிமாவின் முன்னணி கவிஞராக போற்றப்படும் கண்ணதாசன் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ளார். அதேபோல் இளையராஜா அறிமுகமான தொடக்கத்தில் அவரது இசையில் பாடல்கள் எழுதியிருந்தாலும் ஒரு கட்டத்தில் கண்ணதாசன் தனது படங்களுக்கு பாடல் எழுதுவதை இளையராஜா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை பாடலாக கொடுத்து பல தத்துவ பாடல்களை மக்கள் மத்தியில் விதைத்தை பெருமைக்கு சொந்தக்காரர் கவியரசர் கண்ணதாசன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்டும் அத்தனை உணர்வுகளுக்கும் தனது பாடல் மூலம் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசன், பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் இசையிலும் பாடல் எழுதி இருக்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில கண்ணதாசன் பாடல் எழுதுவதை இளையராஜா விரும்பவில்லை என்று அவரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அண்ணாதுரை கண்ணதாசன், அன்னக்கிளி படத்தின்போது நான் உதவி இயக்குனர். அதன்பிறகு பாலூட்டி வளர்த்த கிளி என்ற படத்தில் பணியாற்றினேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் அப்பா கண்ணதாசனை தவிர மற்ற யாரையும் வைத்து பாடல் எழுதமாட்டார். அப்போது என்னிடம் உன் அப்பாவை கம்போசிங்கு அழைத்து வந்துவிடு என்று சொன்னார்.

நானும் சரி என்று அப்பாவிடம் சொன்னேன். அவர் யார் மியூசிக் என்று கேட்டார். இளையராஜா என்று நான் சொன்னது அப்படியா யாரு அது என்று கேட்டார். புதுமுகம் அப்பா, அன்னக்கிளி படத்தில் இசையமைத்துள்ளார் என்று சொன்னேன். அதன்பிறகு வருகிறேன் என்று சொன்னார். மறுநாள் சொன்னதுபோலவே ஸ்டூடியோவுக்கு வந்த அப்பா, இளையராஜாவை பார்த்து அட நம்ம ராஜா என்று சொன்னார்.

இளையராஜாவின் குரு ஜி.கே.வெங்கடேஷிடம் இருக்கும்போது அப்பாவுக்கு இளையராஜாவை ராஜா என்று தெரியும். அதன்பிறகு அந்த படத்தின் பாடல் எழுதி முடித்தவுடன் தொடர்ந்து இளையராஜா இசையில் அப்பா பல பாடல்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இளையராஜா கம்போசிங்கில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் டியூனை கேசட்டில் கொடுத்து அனுப்பி பாடல்களை கவிஞர்களிடம் இந்து வாங்கிக்கொண்டார்.

மற்ற கவிஞர்களிடம் இப்படி இருந்தாலும் அப்பா கண்ணதாசனிடம் இது முடியாது. அப்பா பாடல் எழுதுகிறார் என்றால் இளையராஜா கம்போசிங்கில் உட்கார வேண்டும். அவரால் முடியாத சமயத்தில் அவரது தம்பி கங்கை அமரன் வந்து டியூன் வாசிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் இதை விரும்பாத இளையராஜா அப்பா கண்ணதாசனை அவாயிட் பண்ண தொடங்கினார் என்று அண்ணாதுரை கண்ணதாசன் தெரிவித்துள்ளார்...!
 

Leave a Reply