• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 700 சோப்பு கட்டிகளை பயன்படுத்தி நகர்த்தப்பட்ட 220 டன் கட்டிடம்

கனடா

கனடாவில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நூற்றுக்கணக்கான சோப்பு கட்டிகளை பயன்படுத்தி நகர்த்தபட்டுள்ளது.

கனடாவின் Nova Scotiaவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஏனெனில் 220 டன் எடையுள்ள ஒரு பாரிய கட்டிடம் சோப்புக் கட்டிகளின் உதவியுடன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

197 ஆண்டுகள் பழமையான கட்டிடம்

Halifaxல் உள்ள இந்த கட்டிடம் 1826-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் அது Victorian Elmwood Hotel-ஆக மாற்றப்பட்டது.

இந்த கட்டிடத்தை இடிக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. ஆனால், ரியல் எஸ்டேட் நிறுவனமான Galaxy Properties, இந்த கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்றும் திட்டத்துடன் வாங்கியது. இதனால் கட்டிடம் இடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது.

Canada Hotel Moved, 220-tonne hotel shifted with the help of 700 soap bars, கனடாவில் 700 சோப்பு கட்டிகளை பயன்படுத்தி நகர்த்தப்பட்ட 220 டன் கட்டிடம்

ஆனால் இந்த கட்டுமான நிறுவனம் தற்போது முழு கட்டிடத்தையும் நகர்த்திய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

S Rushton Construction-ன் ஒரு குழு சுமார் 700 சோப்புகளின் உதவியுடன் ஹொட்டலை அதன் புதிய இடத்திற்கு மாற்றியது. கட்டிடம் மிகவும் மென்மையாக இருப்பதால் உருளைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இரும்புச் சட்டத்தை ஏற்ற ஐவரி சோப்பை (ivory soap) பயன்படுத்த முடிவு செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் Sheldon Rushton கூறினார்.

கட்டிடம் மாற்றப்பட்ட வீடியோவை கட்டுமான நிறுவனம் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. சோப்புகளின் உதவியுடன் ஹொட்டல் 30 அடிக்கு நகர்த்தப்பட்டதை அந்த வீடியோ காட்டுகிறது. புதிய அடித்தளம் தயாரான பிறகு கட்டிடம் மாற்றப்பட்டது. எதிர்காலத்தில் இந்த வரலாற்று கட்டிடத்தை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும் என்று Sheldon கூறினார்.
 

Leave a Reply