• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுப்பது சட்டவிரோதம் - ஜனக ரத்நாயக்க

இலங்கை

மின் உற்பத்திக்கான செலவீனங்கள் குறைந்திருக்கின்றது என்றும் ஒரு வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை விடுப்பதானது சட்டவிரோத செயல் என்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது.

சட்டமூலங்களுக்கு அமைவாக வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மின் கட்டணத்தை அதிகரிக்க முடியும்.

இந்த நடைமுறைக்கு அப்பால் மின் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது சட்டவிரோதமானது.

மின் கட்டண அதிகரிப்பிற்கான காரணங்களாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருக்கின்றது என்றும் மின் உற்பத்தி செலவு அதிகரித்திருக்கின்றது என்றும் மின்சார சபை கூறுகின்றது.

மின்சார கேள்வி அதிகரிப்பு தொடர்பான அறிக்கைகளை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரியிருந்தது

தற்போது வரையில் அது கிடைக்கப்பெறவில்லை.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான மின் உற்பத்தி செலவீனங்களை ஈடுசெய்வதற்காகவே மி;ன்சார சபை கட்டண அதிகரிப்பை கோரியிருக்கின்றது.

ஆனால் தற்போது அந்த நிலை மாறியிருக்கின்றது.

எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி நீர் மின் உற்பத்திக்கு தேவையான நீர் வளம் இருக்கின்றது.

அதே நேரம் அணல் மின் உற்பத்திற்கு தேவையான மூலப்பொருட்களின் விலைகளும் உலக சந்தையில் குறைவடைந்துள்ளன.

இந்த காலப்பகுதியில் மின்சாரத்திற்கான கேள்வியும் குறைந்தே காணப்படுகின்றது. ஆகவே மின் கட்டண அதிகரிப்பு ஒன்று தேவையே இல்லை.

என்னுடைய கணக்கெடுப்பின் படி இந்த வருட இறுதியில் இலங்கை மின்சார சபையானது மின் கட்டணத்தை அதிகரித்தாலும் அதிகரிக்கா விட்டாலும் 30 பில்லியன் இலாபத்தை பெறும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply