• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்றில் மோதிக்கொண்ட பொன்சேகா – மைத்திரி

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது சரத் பொன்சேகாவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த இருவரில் ஒருவர் மைத்திரிபால சிறிசேன என சரத் பொன்சேகா தெரிவித்த போது கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராணுவத் தலைமையகத்தைக் கூட பாதுகாக்க முடியாமல் தாக்குதலுக்குப் பின்னர் பொன்சேகா குடல் சேதமடைந்த நிலையில் சென்றார் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பொன்சேகா, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்றும் இந்த முட்டாளுக்கு இராணுவத் தளபதியின் கடமைகள் புரியவில்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் 1,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இறந்தனர் என தெரிவித்தார்.

அத்தோடு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக இவரை ஆதரித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

Leave a Reply