• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

இலங்கை

இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.நா பயன்படுத்திய வழிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,13வது திருத்தத்தை யாரேனும் விரும்பினால், இலங்கை நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும்.
1987ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோர வேண்டும்.

13வது திருத்தம் நாட்டின் சட்டமாகும்.

எனவே எந்த அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்த மறுத்தால் அதனை விரும்பும் தமிழ் அரசியல் வாதிகள் நீதிமன்றத்தை நாடவேண்டும்.

இலங்கையின் நீதித்துறை அதனை அமுல்படுத்துவதில் தோல்வியடைந்தால், இலங்கை தனது சொந்த அரசியலமைப்பை மதித்து பின்பற்றவில்லை என்பதையே உலகிற்கு காட்டுகின்றது.

சிங்கள அரசியலமைப்பு எமக்கு வேண்டாம்13வது திருத்தம் என்பது தமிழர்களின் அரசியல் தீர்வோ அல்லது தமிழர்களுக்கு உதவுவதற்காகவோ அல்ல.

இந்தியா எப்போது இலங்கை மீது படையெடுக்க விரும்புகிறதோ அல்லது இலங்கைக்கு வர நினைக்கிறதோ, அப்போதெல்லாம் 13வது திருத்தம், அவர்களின் துரும்பாக இருக்கும்.

எனவே, பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள், இலங்கையின் வடகிழக்கில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தவும், அதற்காகப் பிரச்சாரம் செய்யவும் ஐ.நாவை கோருகிறோம்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு திமோரில் ஐ.நா பயன்படுத்திய முறை மற்றும் வழிமுறையை ஐநா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
 

Leave a Reply