• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சரவணமுத்து இராமலிங்கபிள்ளை

பிறப்பு 28 MAY 1938 / இறப்பு 23 MAR 2026

யாழ். சுழிபுரம் தொல்புரம் கிழக்கு மடத்தடி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமலிங்கபிள்ளை அவர்கள் 23-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை, தர்மநாயகி, கணேஸ்வரி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, சபாநாயகம் மற்றும் பிரேமாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சிவப்பிரகாசம், அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பங்கயச்செல்வி(லண்டன்), அபிராமி(வலிமேற்கு பிரதேசசபை- சுழிபுரம்) ஆகியோரின் பசமிகு தந்தையும்,

சிவகுமரன்(லண்டன்), நாகராஜா(இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜானுகா, கஜானன், விசாகன்(லண்டன்), அபிலாஷ், கபிஷன் (மாணவர்கள் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி), மகிஷா(பண்ணாகம் மெய்கண்டான் வித்தியா சாலை மாணவி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94770344242

Leave a Reply