• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வசூலில் அடிதூள் கிளப்பும் நடிகர் சூர்யாவின் சீன் படம்... தமிழகத்தில் மாஸ் கலெக்ஷன்

சினிமா

2026 யாருக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்பது தெரியவில்லை.

ஆனால் நடிகர் சூர்யாவிற்கு இந்த வருடம் மிகவும் ஸ்பெஷலோ ஸ்பெஷல் தான். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக இருந்த கருப்பு படம் மக்களிடம் போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது.

ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் தாறுமாறு வெற்றியை கண்டது, பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.

அடுத்து தெலுங்கு பட இயக்குனருடன் கைக்கோர்த்த சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்தார். இந்த படமும் வெளியாகி கருப்பு பட அளவிற்கு இல்லை என்றாலும் வெற்றிப்பெற்றது.

இடையில் சூர்யா-ஜோதிகா தங்களது 20வது வருட திருமண நாளை வெளிநாட்டில் மீண்டும் திருமணம் செய்து கொண்டாடினார்கள். அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாக செம வைரலானது.

சீன் படம்: இப்போது மலையாள பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த சூர்யா சீன் என்ற படத்தில் நடித்திருந்தார். வழக்கமாக சூர்யா நடித்த போலீஸ் கதை இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் கடந்த நவம்பர் 6ம் தேதி வெளியான இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்: நாளுக்கு நாள் தாறுமாறு வசூல் வேட்டை செய்யும் இப்படம் மொத்தமாக ரூ. 263 கோடி வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 93.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
 

Leave a Reply