ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா
இலங்கை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
அந்த வகையில் கடந்த 31ம் திகதி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியாவின் தெற்கு கடற்கரை நகரான சண்டக் என்ற பகுதியில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 2க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, ஜப்பானில் செயல்பட்டு வரும் பியான்சி என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்திடமிருந்து ரூ. 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கிரிப்டோ கரன்சியை வடகொரியா திருவிட்டதாக தென்கொரியா குற்றஞ்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















