தெலுங்கில் மிகவும் வயதான நடிகருடன் காதல் காட்சிகளில் நடித்தது வெறுப்பாக இருந்தது - நடிகை ராதிகா ஆப்தே
சினிமா
நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, தெலுங்கில் தான் மிகவும் வயதான ஒரு நடிகருடன் காதல் காட்சிகளில் நடித்தது வெறுப்பாக இருந்ததாகவும், அது ஆணாதிக்க சூழல் நிறைந்த இடமாக இருந்ததாகவும் கூறினார்.
நெட்ஃபிளிக்ஸ் தொடரான அக்கா-வில்(Akka), நடிகை ராதிகா ஆப்தே மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று ஜும் தளத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராதிகா ஆப்தேவிடம் தென்னிந்திய சினமா அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது ராதிகா ஆப்தே, தான் நடித்த ஒரு தெலுங்கு படத்தின் பெயரை குறிப்பிடாமல், அக்கதையில் தனது கதாபாத்திரம் மிகவும் வயதான தாய்மாமனை திருமணம் செய்துகொண்டதாக கூறினார்.
மேலும் அது தனக்கு பிடிக்காத ஒரு கதை அம்சமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், “நான் நடித்த ஒரு தெலுங்கு படத்தில், என் மாமாவை திருமணம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. மேலும் அதில் என்னை விட மிகவும் வயதான ஒரு நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.
அது ஆணாதிக்க சூழல் நிறைந்த இடமாக இருந்தது, எனக்கு அதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. நான்அந்த கதையில் நடுவிலேயே இறந்துவிடுகிறேன்.
அந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியில், அந்த நடிகர் என்னை தோள்களின் மேல் தூக்கி, பின்னர் தூக்கி எறிந்துவிடுவார். அப்போது நான், எப்போது சாகப் போகிறேன்? என நினைத்து கொண்டிருந்தேன்.
அந்த படம் எனக்கு மிகவும் சவாலான ஒரு படமாக இருந்தது, அதில் இருந்த எல்லாவற்றையும் நான் வெறுத்தேன்” என கூறினார்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், மாமாவை திருமணம் செய்துகொள்வது தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள ஒரு வழக்கம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்து இணையத்தில் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பயனர்கள் வெளியிட்ட பதிவில், “நடிகர் பாலகிருஷ்ணாவுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு நடித்த லெஜண்ட் திரைப்படத்தை ராதிகா ஆப்தே குறிப்பிடுவதாக கூறினர்.
மேலும் அந்த காலகட்டத்தில் பாலகிருஷ்ணா 54 வயதாக இருந்ததாகவும், ராதிகா ஆதேவுக்கு 29 வயதாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
ஒரு திரைப்படத்தை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு, ஒரு நடிகருடன் ஜோடியாக நடிப்பதற்கு தங்களுக்கு பிரச்சனை இருந்தால், பிறகு ஏன் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டீர்கள் என கேள்வி எழுப்பினர்.
தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் தாங்கள் நடித்ததால் தான், தெலுங்கு ரசிகர்களுக்கு உங்களை தெரியும் என்றும், ஆனால் இப்போது நீங்கள் தெலுங்கு சினிமாவையே விமர்சிக்கிறீர்கள் எனவும் ரசிகர்கள் பதிவிட்டனர்.





















