• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லை – லிட்ரோ கேஸ் அறிவிப்பு

இலங்கை

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தில் உள்ள சவால்கள் இருந்தபோதிலும், நவம்பர் மாதத்தில் சமையல் எரிவாயு (LP) சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) நிறுவனம் அறிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள விலைகளே 2026 நவம்பர் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

கொழும்பு மாவட்டத்திற்குப் பொருந்தும் வகையில், லிட்ரோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு:

இதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 4,365 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை 1,750 ரூபாயாகவும் தொடர்ந்து இருக்கும்.

மேலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலையும் 815 ரூபாயாகவே நீடிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply