• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாய் பல்லவியின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட ஓம் படக்குழு

ஓம் படத்தில் நடித்துள்ள சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுகக் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் சாய் பல்லவி 'நித்யா ரெட்டி' என்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடிகை சாய்பல்லவி நடிக்கிறார்.செம்மரக் கடத்தலுக்கு எதிரான ஆபரேஷன் ஓம் என்ற அதிரடிப் படையை வழிநடத்தும் கம்பீரமான வனத்துறை மற்றும் சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாத்திரத்தில் அவர் களமிறங்கியுள்ளார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் மம்முட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ள வரவிருக்கும் தமிழ்த் திரைப்படம் ஓம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் கிளிம்ஸ் மற்றும் பாடல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Leave a Reply