• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்.. 

சினிமா

Jailer 2 North India Box Office: வட இந்தியாவில் ஜெயிலர் 2 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலகளவில், தமிழ்நாட்டில், வெளிநாடுகளில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி வரும் நிலையில், வட இந்தியாவில் 5 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 வட இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் வட இந்தியாவில் இப்படம் பிரேக் ஈவன் செய்துள்ளது. இனி வரும் வசூல் அனைத்தும் லாப கணக்கில் மட்டுமே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply