இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு
இலங்கை
உஸ்பெகிஸ்தானின் சென்ட்ரம் ஏர் (Centrum Air) ஒரு புதிய சர்வதேச வழித்தடத்தைத் தொடங்குகிறது.
அதன்படி நிறுவனம், எதிர்வரும் எதிர்வரும் ஒக்டோபர் 28 முதல் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிலிருந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமானச் சேவைகளை இயக்கவுள்ளது.
2027 மார்ச் இறுதி வரை, வாரத்திற்கு இருமுறை (புதன் மற்றும் சனிக்கிழமை) விமானங்கள் இயக்கப்படும்.
இவை வசதியான, புதிய ஏர்பஸ் A320 ரக விமானங்களைக் கொண்டு இயக்கப்படும்.
புதிய விமான சேவையின் ஆரம்பம் குறித்து உறுதிபடுத்தியுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், இது இலங்கை–உஸ்பெகிஸ்தான் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், சுற்றுலாவை விரிவுபடுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் – என்று கூறியுள்ளார்.
விமான சேவைக்கான கட்டணங்கள் 357.28 அமெரிக்க டொலர்களிலிருந்து (118,420 ரூபா) தொடங்குகின்றன.
டிக்கெட்டுகள் ஏற்கனவே centrum-air.com இணையதளத்திலும், App Store மற்றும் Google Play-இல் கிடைக்கக்கூடிய Centrum Air மொபைல் செயலியிலும் விற்பனைக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





















