• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

சினிமா

Jailer 2 Worldwide Box office: ஜெயிலர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்ப்போம்.

படையப்பா, சிவாஜி, எந்திரன், கபாலி, 2.0 என ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இண்டஸ்ட்ரி கொடுத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வரிசையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படமும் இணையப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 'ஒன் சன், ஒன் மூன், ஒன் சூப்பர்ஸ்டார்' என ரசிகர்கள் ரஜினியை தலைமேல் தூக்கி கொண்டாடி வருகிறார்கள்.

ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளிலிருந்து எவ்வளவு வசூல் செய்கிறது, எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்று தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள ஜெயிலர் 2 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான ஜெயிலர் 2 மக்களின் பேராதரவோடு 5 நாட்களில் உலகளவில் ரூ. 475 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும். இந்த வாரத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக ரூ. 700 கோடியை எட்டும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply