கனடாவின் துணிச்சலை வியந்து பாராட்டும் பிரான்ஸ் தூதர்
கனடா
Envoy says France admires Carney’s U.S. stance; கனடா அமெரிக்காவைக் கையாளும் விதம் கண்டு வியப்படைவதாக கனடாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக நடந்துகொள்ளும் நிலையிலும், கனடா அரசு அதற்கு பதிலளித்துவரும் விதம் வியப்பை ஏற்படுத்துவதாக கனடாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடா மீது தொடர்ந்து கூடுதல் வரிகள் விதித்துவருகிறார். பதிலுக்கு கனடாவும் வளைந்துகொடுக்காமல் பதிலடி கொடுத்துவருகிறது.
அப்படி ட்ரம்பை கனடா பிரதமர் மார்க் கார்னி எதிர்கொள்ளும் விதத்தைக் கண்டு தாங்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளதாக கனடாவுக்காக புதிய பிரான்ஸ் தூதரான ஹெலன் ஃபெர்னாட் டீஃப்ரோமண்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிரவாகத்துடன் கனடா பிரதமரான மார்க் கார்னி வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் மேற்கொண்டுவரும் அணுகுமுறை மற்றவர்களுக்கு முன்மாதிரியானது என கூறும் வகையில் பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் ஹெலன்.
வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற இருந்தபோது, கடைசி நேரத்தில் அமெரிக்கா புதிய நிபந்தனைகளை முன்வைக்க, பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினார் மார்க் கார்னி.
இந்நிலையில், அவர் எடுத்த அமைதியும் துணிச்சலுமான முடிவு, ஐரோப்பாவால், குறிப்பாக, பிரான்சால் பாராட்டத் தகுந்த ஒரு முடிவு என்று கூறியுள்ளார் ஹெலன்.
அத்துடன், என்னைப் பொருத்தவரை, என் இலக்கு ஐரோப்பாவில் கனடாவின் நெருக்கமான கூட்டாளர் நாடுகளில் ஒன்றாக பிரான்சை ஆக்க முயற்சி எடுப்பதுதான் என்றும் கூறியுள்ளார் ஹெலன்.






















