• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழக முதல்வர் விஜயை கடுமையாக சாடிய ஜனாதிபதி அநுர

இலங்கை

கச்சத்தீவை மீட்பது தொடர்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்த கூற்றினை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.

அயல்நாடான இந்தியாவுடன், இலங்கை நெருக்கமான உறவினை கொண்டுள்ள நிலையில், எமது ஆளுகைக்குட்பட்ட கச்சதீவை மீட்பது தொடர்பில் தவறான கருத்து வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கச்சத்தீவின் அதிகாரம் என்றும் இலங்கை அரசாங்கத்திடமே உள்ளதாக, நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கச்சதீவு மீட்பு

தமிழக தேர்தல் பரப்புரையின் போது, கச்சத்தீவை மீட்கப் போவதாக, தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தார்.

எனினும் அண்மையில் இந்திய உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றின் போது கச்சத்தீவின் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே உள்ளதென அறிவிக்கப்பட்டது. இதனை இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், கச்சத்தீவு தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொள்ளவில்லை. எங்களுக்கான எல்லை எங்களுக்கு தெரியும்.

ராஜதந்திர நடைமுறை

இறைமையுள்ள நாடாக எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாமல், முறையான ராஜதந்திர நடைமுறைகளை கையாண்டு வருகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஈரான் கப்பல் விவகாரத்திலும் சர்வதேச ரீதியில் பாராட்டுக்குரிய தீர்மானம் ஒன்றை நாங்கள் எடுத்திருந்தோம்.

இலங்கையின் கடல் மற்றும் வான் பரப்புகளுக்குள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நாம் செயற்பட மாட்டோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply