• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

இலங்கை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் எலும்பு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி விமலராஜன் தலைமையிலான மருத்துவர் குழாம் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் உயர்ந்தபட்ச மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்கி வரும் நிலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மூளைச்சாவடைந்த நோயாளி

இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனது இரு சிறுநீரகங்களையும் நீண்டகாலம் சிறுநீரகங்கள் பழுதடைந்த இருவருக்கு வழங்கி அவர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மன்னாரில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும் என்ன மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply