• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா, யுகே, ஜெர்மன், நார்வே அனைத்து இடங்களிலும் ஜெயிலர் 2 புயல் வேக புக்கிங்

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம்.

இப்படத்தில் ரஜினிகாந்த் தாண்டி எஸ் ஜே சூர்யா, சிவராஜ் குமார், மோகன் லால், விஜய் சேதுபதி, ஹிரித்திக் ரோஷன் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் இதுவரை தமிழ் சினிமா இல்லாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

அதோடு இப்படத்தின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது, குறிப்பாக அமெரிக்கா, யுகே, நார்வே, ஜெர்மன் ஆகிய பகுதிகளில் இப்படம் முன்பதிவு தொடங்கி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது வரை ரூ 2 கோடி இப்படத்திற்கு இந்த நாடுகளில் முன்பதிவு நடந்துள்ளதாம்.

இன்னும் இரண்டு தினங்களில் இப்படத்தின் ட்ரைலர் வர, கண்டிப்பாக வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply