• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் அதிகாலையில் தமிழரின் நகைக்கடை மீது துப்பாக்கிசூடு

கனடா

கனடாவில் தமிழருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றின் மீது நேற்றுமுன் தினம் அதிகாலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி என்ற நகைக்கடையை குறிவைத்தே இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிசூட்டால் கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் தாக்கி, சேதம் அடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாலைவேளை என்பதால் கடையில் பணியாளர் எவரும் அங்கு இருக்காததன் காரணமாக உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

Leave a Reply