• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம் பெண்ணை ஏமாற்றி பெருந்தொகை நகைகளை கொள்ளையிட்ட காதலன்

மிரிஸ்ஸ நகரில் சுற்றுலா விடுதியொன்றை நடத்தி வரும் பெண்ணொருவருடன் முறையற்ற உறவு வைத்திருந்த நபர் அவரை ஏமாற்றி பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புஞ்சிகுளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுர தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பெண்ணுடனான நெருக்கமான உறவை பயன்படுத்தி, அனுராதபுர பகுதியில் காணியும் வீடும் வாங்கிக் கொடுப்பதாக கூறி கடந்த 20ஆம் திகதி அவரைக் கவர்க்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அவருக்கு போதைப்பொருள் கலக்கப்பட்ட சூப்பைக் குடிக்கக் கொடுத்துள்ளார்.

சந்தேகநபர் வழங்கிய சூப் வகையைக் குடித்த பின்னர் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் பெண்ணின் காரில் இருந்த 30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி கொள்வனவு செய்வதற்காக குறித்த நகைகளை பெண் கொண்டு வந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியையும் பொலிஸார் தற்போது மீட்டுள்ளனர்.
 

Leave a Reply