உணவு வீணாவதைத் தடுக்க ஜேர்மன் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பு
சினிமா
Researchers in Germany have made smart sensors for apples to reduce spoilage: பழங்கள் அழுகுவதை முன்கூட்டியே அறிந்து அவை வீணாவதைத் தடுக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார்கள் ஜேர்மன் அறிவியலாளர்கள்.
அறுவடை செய்யப்படும் ஆப்பிள்களில், பத்தில் ஒரு ஆப்பிள், நுகர்வோரைச் சென்றடையும் முன் அழுகிப்போகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த நஷ்டத்தைத் தடுக்கும் வகையில், ஆப்பிள்கள் அழுகும் முன் அதைச் சுற்றியுள்ள ஈரம் போன்ற விடயங்களைக் கண்டறிந்து வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தி, பழங்கள் கெட்டுப்போவதைத் தடுக்கும் தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்துள்ளார்கள் ஜேர்மன் ஆய்வாளர்கள்.
நல்ல செய்தி என்னவென்றால், ஆப்பிள்களில் மட்டுமல்ல, இந்த தொழில்நுட்பத்தை மற்ற பழங்கள் மீதும் பயன்படுத்தலாம்.
அவ்வகையில், உலகில் பழங்கள் அழுகி வீணாவதைத் தடுக்க இந்த தொழில்நுட்பம் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.
உலகில் 8 முதல் 10 சதவிகித பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதற்கு, இப்படி பழங்கள் அழுகுவது காரணமாக அமைந்துள்ளது.
இந்த பசுமை இல்ல வாயுக்கள், புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைகின்றன.
ஆக, பழங்கள் அழுகுவதைக் குறைப்பது, புவி வெப்பமயமாதல் அதிகரிக்காமல் இருக்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.






















