• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்சிக் படத்தின் ஓடிடி ரிலீஸ்..

சினிமா

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎப் புகழ் யஷ் நடிக்க கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி வெளியான திரைப்படம் டாக்ஸிக்.

கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்க யஷ்ஷுடன், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்க இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

ராயா என்ற வேடத்தில் யஷ் நடிக்க அவரது சகோதரியாக கங்கா வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் ஆங்கிலத்திலும் வெளியாகி இருந்தது.

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் முதல் நாளே எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

அதிக வன்முறை, ஆபாசம், சரியில்லாத திரைக்கதை என நிறைய விமர்சனங்களை எதிர்க்கொண்டன. ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை ஈட்டி தோல்வியடைந்தது.

இந்நிலையில், படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply