வட அயர்லாந்தும் அயர்லாந்துக் குடியரசும் இணையவேண்டும் - ட்ரம்ப் விருப்பம்
Donald Trump doubles down on support for united Ireland: ஒன்றுபட்ட அயர்லாந்து குறித்த தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ட்ரம்ப்.
அயர்லாந்துக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வழக்கம்போல குட்டையைக் குழப்பிவிட்டுச் சென்றுள்ளார்.
தனக்கு சம்பந்தமில்லாத நாடுகளின் அரசியலில் தலையிட்டு கருத்துக்கள் தெரிவிப்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழக்கமாகிவிட்டது.
கனடா, கிரீன்லாந்து, மெக்சிகோ, கியூபா மற்றும் காஸா, பனாமா கால்வாய் என பல்வேறு பகுதிகளை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து கனவு கண்டுகொண்டிருக்கும் ட்ரம்ப், பிரித்தானியாவிலும் தனது வேலையைக் காட்டியுள்ளார்.
சனிக்கிழமையன்று இரண்டு நாள் பயணமாக அயர்லாந்துக்குச் சென்றிருந்த ட்ரம்ப், போகிற போக்கில், ஒன்றுபட்ட அயர்லாந்தைக் காண தான் விரும்புவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
வட அயர்லாந்தும், அயர்லாந்துக் குடியரசும் இணைவது என்பது, மிகவும் இயல்பான விடயமாக தனக்குத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.
அவரது கருத்துக்கள், அயர்லாந்துக் கடலின் இரண்டு பக்கத்திலும் திடீர்க் குழப்பதை உருவாக்கியுள்ளதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகள் பிரித்தானியாவிலிருந்து பிரிவது தொடர்பில் பேச்சு எழுந்துள்ள நிலையில், ட்ரம்ப் வேறு குட்டையைக் குழப்ப, ஏற்கனவே இருக்கும் கவலைகள் போதாதென இப்போது பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு புதுக் கவலை உருவாகியுள்ளது எனலாம்.





















