மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியானது
சினிமா
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இத்திரைப்படம் வரும் நவம்பர் 6 அன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தை தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்களின் இயக்குநரான சுந்தர் சி இயக்கியுள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட மற்றும் பிரம்மாண்டமான பின்னணியில், ஆன்மீகம், எமோஷன் மற்றும் பவர் நிறைந்த ஒரு விஷுவல் ட்ரீட்டாக இப்படம் உருவாகியுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பான்-இந்தியா முறையில் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கில் இப்படம் 'மஹாசக்தி' என்ற பெயரில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் மிரட்டுகிறார். இதற்காக அவர் ஒரு மாதம் கடுமையான விரதங்களை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் நயன்தாராவிற்கு எதிராக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, அபினயா, இனியா, கருடா ராம், சிங்கம்புலி மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.
முதல் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், இந்த இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆன்மீக மற்றும் வணிகரீதியான கொண்டாட்டமாக அமையும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.






















