நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு
இலங்கை
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வைரவர் உற்சவம் நடைபெற்றது.
ஆலய மகோற்சவம் கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று கடந்த வியாழக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று நேற்றைய தினம் சனிக்கிழமை வைரவர் சாந்தி நடைபெற்றது.
அதேவேளை நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு இ ஆலய சுற்று வீதிகள் கடந்த 16ஆம் திகதி முதல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் வைரவர் சாந்தி நிறைவடைந்ததும் வீதிகள் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டன.






















