• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா ஒப்பந்தம் செய்ய துடிக்கிறது - டொனால்ட் டிரம்ப்

கனடா

அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உரையின் போது பேசிய டிரம்ப், "கனடா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் விரும்புகிறது, அவர்கள் ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார்.

தனது நிர்வாகத்தின் கீழ் நீர்நிலைகளின் பெயர்களை மாற்றும் முடிவை அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி: இனி 'லேக் அமெரிக்கா' என்று அழைக்கப்படும் எனவும், 'அமெரிக்க வளைகுடா' எனவும் மாற்றப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க மாநிலமான 'நியூ மெக்சிகோ'வின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்றலாம் என்ற தனது யோசனையையும் டிரம்ப் இதன்போது முன்வைத்தார்.  
 

Leave a Reply