• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அமைச்சரவை அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பம்

இலங்கை

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவை அறிக்கையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அது தொடர்பான அமைச்சரவை அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்மொழிவ ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தினார். News

இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதுகுறித்து விரிவாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார:

“பொதுவாக, நீதிமன்றங்களில் வழக்குகள் கணிசமான காலம் இழுத்தடிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

இதற்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் அதே வேளையில், நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

புதிய நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீதித்துறைத் தளத்திலிருந்தே எழுந்துள்ளது.

முன்னதாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோதிலும், அவர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிக்கப்படவில்லை.” எனத் தெளிவுபடுத்தினார்.

Leave a Reply