• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தம்பையா நடேசலிங்கம்

பிறப்பு 11 FEB 1952 / இறப்பு 25 JUL 2026

யாழ். காரைநகர் களபூமி திக்கரையைப்  பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நடேசலிங்கம் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமார்(முகமையாளர் SVM Pvt. Ltd- கொழும்பு), திருமகள்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருட்செல்வம்(லண்டன்), தனுஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தன்சி, குருதாஸ், குருராம், சஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான இந்திராணி, தியாகலிங்கம், யோகராணி மற்றும் அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மபாலன், விஜயரட்ணம், சத்தியலிங்கம், கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, இரதிஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி, இரத்தினபூபதி, , செல்வராணி, வசந்தகுமாரி, நல்லலிங்கம், மகேந்திராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).   

வீட்டு முகவரி:
22, பிரப்பன்குளம் லேன்,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் - மகன்

    Mobile : +94777910697

திருமகள் - மகள்

    Mobile : +447480169506

அருள் - மருமகன்

    Mobile : +447713431353

Leave a Reply