உன் மச்சங்களை பார்க்க வேண்டும்-பாலிவுட் நடிகர் அனுப்பிய மெசேஜை அம்பலப்படுத்திய ஜான்வி கபூர்
சினிமா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது தென்னிந்திய திரைப்படங்களிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகை ஜான்வி கபூர். சமீபத்தில் தனது சகோதரி குஷி கபூருடன் சேர்ந்து, கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் பிரபல 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல சுவாரசியமான மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கு ஜான்வி கபூர் ஓபனாக பதிலளித்தார்.
நிகழ்ச்சியின் 'ரேபிட் பயர்' சுற்றின் போது கரண் ஜோஹர், உங்களுக்கு இதுவரை வந்த குறுஞ்செய்திகளிலேயே மிகவும் ஃபிளர்ட்டியான மெசேஜ் எது? என்று கேட்டார். இதற்கு பதிலளிப்பதற்கு முன் தன் சகோதரி குஷியைப் பார்த்து, நான் இதைச் சொன்னால் நீ என் மீது கோபப்படுவாய் என நினைக்கிறேன் என்று கூறி சிரித்தார்.
பின்னர் கரண் ஜோஹரிடம், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜை வெளிப்படையாகக் கூறினார். "உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா?" என்று அந்த நடிகர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக ஜான்வி கபூர் கூறினார்.
ஜான்வியின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கரண் ஜோஹர், தனது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், அப்படியா! உனக்கு அவ்வளவு மச்சங்களா இருக்கின்றன? என வேடிக்கையாகக் கேட்டார். அதற்கு ஜான்வி கபூர், ஆமாம், எனக்கு நிறையவே இருக்கின்றன என்று வெட்கத்துடன் சிரித்தபடியே பதிலளித்தார். இவர்களின் இந்த கலகலப்பான உரையாடல் அங்கிருந்த அனைவரையும் பெரும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
யார் அந்த நடிகர்?
இருப்பினும், அந்த மெசேஜை அனுப்பிய பாலிவுட் நடிகர் யார் என்பதை ஜான்வி கபூர் வெளியில் சொல்லவில்லை. இதனால், ஜான்வி கபூருக்கு அப்படி ஒரு மெசேஜ் அனுப்பிய அந்த குறும்புக்கார நடிகர் யாராக இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்தும் தேடியும் வருகின்றனர்.























