ஈரான் மற்றும் ஈராக் செல்ல பஹ்ரைன் மக்களுக்கு தடை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் ஸ்திரமற்ற பாதுகாப்புச் சூழல் மற்றும் தொடர் பதற்ற நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தங்களது நாட்டுப் பிரஜைகள் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு முழுமையான தடை விதித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் நிலையற்ற போர்நிறுத்தத்திற்கு மத்தியில், இந்த முடிவுக்குக் கட்டுப்படுமாறு பஹ்ரைன் குடிமக்களை வலியுறுத்தி, அமைச்சு ஒரு அறிக்கையில் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது முனையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை அடுத்து, அங்கிருந்த வானூர்தி போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு, வானூர்திகள் அருகில் உள்ள வானூர்தி நிலையங்களுக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






















