அமெரிக்காவில் மூன்று நண்பர்களை காப்பாற்றி உயிரிழந்த இந்திய மாணவர்
அமெரிக்காவில் தண்ணீரில் விழுந்த தனது மூன்று நண்பர்களை காப்பாற்றி விட்டு நேரில் சிக்கி இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் லூசியானா ஆகிய பகுதிகளுக்கு இடையில் நடந்திதுள்ளது.
சம்பவத்தில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அனுரூப் ரெட்டி(22) உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த அனுரூப் ரெட்டி சில வாரங்களுக்கு முன்பு தான் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
டோலிடோ பெண்ட் நீர்த்தேக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரின் மூன்று நண்பர்கள் தண்ணீரில் விழுந்தனர். இதையடுத்து தண்ணீரில் குதித்த அனூருப் ரெட்டி அவர்கள் மூன்று பேரையும் காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறார்.
அப்போது அவரின் காலில் மீன் வலைகள் சிக்கியதால் அவரால் கரையேற முடியவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், நீரில் மூழ்கி அனுரூப் ரெட்டி உயிரிழந்தார். இறுதியாக 20 அடி ஆழத்திலிருந்து அவரின் உடலை மீட்டுள்ளனர்.
இந் நிலையில் உயிரிழந்தவரின் சகோதரர் ஆஸ்ட்ரித் ரெட்டி அனுரூப் ரெட்டியின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உதவி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கையை வைத்திருக்கிறார்..























