• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டு சம்பவத்தில் சிறுவன் காயம் 

கனடா

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு யார்க் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சிறுவன், தானாகவே மருத்துவமனைக்குச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷாவ்னி சர்க்கிள் மற்றும் செரோகி பவுலேவர்ட் ஆகிய பகுதிகள் இணைந்திடும் இடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில் தானாகவே மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த துரித புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 
 

Leave a Reply