• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இது தான் நடக்கும் - ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை

இலங்கை

ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் முழுமையாக நிறுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாக்குதல்கள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது: பேச்சுவார்த்தையில் நாங்கள் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறோம். நல்ல ஒப்பந்தத்துக்கு மிக அருகில் இருக்கிறோம்.

அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்தால் நல்லது. இல்லையெனில், நாம் போரை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும். ஈரானின் இராணுவத்தைத் தோற்கடித்துவிட்டோம்.

நான் ஒரு நல்ல முடிவைப் பெறுவதையே விரும்புகிறேன். ஏனெனில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே நம்மால் ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறக்க முடியும். அணு ஆயுதங்கள் இருக்காது என்பதுதான் என்னிடம் உள்ள ஒரே உத்தரவாதம்.

அதற்கு ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளது. நாங்கள் விரும்புவதை மெதுவாகப் பெற்று வருகிறோம். எனக்கு எந்த அவசரமும் இல்லை. அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.
 

Leave a Reply