இந்தியாவில் டொனால்ட் ட்ரம்பின் மகள் டிபானி ட்ரம்ப்
இலங்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளான டிபானி ட்ரம்ப், தனது கணவர் மைக்கேல் பௌலஸுடன் இந்தியாவுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார பாரம்பரியங்களை ஆராயும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
தனது இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக, புதுடெல்லியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அக்ஷர்தாம் கோயிலும், ஆக்ராவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட வண்ணங்களையும் பாரம்பரியங்களையும் கண்டுகளிக்கும் டிபானி ட்ரம்பின் இந்த இந்தியப் பயணம், தற்போது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.























