• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவிலிருந்து பிரிய விரும்பும் ஆல்பர்ட்டா மாகாணம் - பிரதமர் எச்சரிக்கை

கனடா

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை, பிரெக்சிட்டுடன் ஒப்பிட்டு எச்சரித்துள்ளார் கனடா பிரதமர்.

கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் நடைபெறவிருக்கும் ஆல்பர்ட்டா பொது வாக்கெடுப்பை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்ஸிட் வாக்கெடுப்புடன் ஒப்பிட்டு, அது ஒரு ஆபத்தான விடயம் என விமர்சித்துள்ளார் கனடா பிரதமரான மார்க் கார்னி. 

பிரெக்சிட் சமயத்தில் இங்கிலாந்து வங்கியை வழிநடத்தியவரான கார்னி, ’பிரெக்சிட் வாக்கெடுப்பு நடந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், மக்கள் எதற்கோ வாக்களிக்க, ஆனால், எதுவோ கிடைக்க, இப்போது அதை மாற்ற பிரித்தானியா முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறினார்.

ஃபெடரல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஆல்பர்ட்டாவின் நிலையை வலுப்படுத்தும் ஒரு வழிமுறையாக பிரிவினை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிப்பது, எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆல்பர்ட்டா மக்கள், தாங்கள் கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர விரும்புகிறார்களா அல்லது பிரிவினை குறித்த கட்டாய வாக்கெடுப்பைப் பிற்காலத்தில் நடத்த விரும்புகிறார்களா என்பதை அக்டோபர் மாதம் 19ஆம் திகதி முடிவு செய்ய இருக்கிறார்கள்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கார்னி, வரும் மாதங்களில் கனடாவின் ஒற்றுமைக்காக தான் பிரச்சாரம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.

கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது. 

ஆகவே, Stay Free Alberta என்னும் அமைப்பின் தலைவரான மிச் சில்வெஸ்டர் என்பவர், முறைப்படி அரசின் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பில் புகார் மனு ஒன்றை உருவாக்கினார்.

அந்த மனு வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டுமானால், அது சுமார் 178,000 கையெழுத்துக்களைப் பெறவேண்டும்.

ஆனால், அந்த மனு 300,000 கையெழுத்துக்களைப் பெற்றுவிட்டதைத் தொடந்து, மனு முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மனு அங்கீகரிக்கப்படும் நிலையில், அக்டோபர் மாதம் 19ஆம் திகதி அது வாக்கெடுப்புக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply