ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும் - மார்கோ ரூபியோ எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் கத்தார் நாட்டின் தோஹா (Doha) நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி எந்தவொரு சூழலிலும் திறக்கப்பட்டே ஆக வேண்டும் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) வலியுறுத்தினார்.
மார்கோ ரூபியோ, மூன்று நாள் பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ள நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் Jaipur நகருக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஈரான்–அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான நிலைமைகள் குறித்து முக்கிய கருத்துகளை வெளியிட்டார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் கத்தார் நாட்டின் Doha நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி எந்தவொரு சூழலிலும் திறக்கப்பட்டே ஆக வேண்டும் என மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கத்தாரில் தற்போது முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. முன்மொழிவுகளை இறுதிப்படுத்த இரு தரப்பினரும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அமெரிக்க அதிபர் நல்ல ஒப்பந்தத்தையே விரும்புகிறார்.
இல்லையெனில் எந்த ஒப்பந்தத்தையும் செய்யமாட்டார்,” என Marco Rubio தெரிவித்தார். மேலும், “ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டே ஆக வேண்டும். அது ஒரு வழியில் இல்லையெனில் மற்றொரு வழியில் திறக்கப்படும்,” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த கருத்து, பேச்சுவார்த்தை மூலம் அல்லது ராணுவ நடவடிக்கை மூலமாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற மறைமுக சுட்டிக்காட்டாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், ஹார்முஸ் அருகே தெற்கு ஈரானின் முக்கிய ராணுவ மையமாகக் கருதப்படும் Bandar Abbas பகுதியில் அமெரிக்க ராணுவம் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் ஈரான் கடற்படை மற்றும் விமானப்படைத் தளங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























