தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் விரைவில் வெளியீடு
சினிமா
காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம் 'தி இந்தியா ஸ்டோரி (The India Story). அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்- இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.
ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும் அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும் இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.
தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமித் பாகடே -அனிதா ஜாதவ்- விநாயக் சைதானி- கல்பேஷ் ஷா - தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது.





















