அமெரிக்கா செல்லும் பிரித்தானிய மன்னர் - எப்ஸ்டீன் தொடர்புடையவர்களை சந்திக்க மாட்டார்கள்
இந்த மாத இறுதியில் அமெரிக்காஅரசுமுறைப் பயணத்தின் போது, ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களுடன் தொடர்புடையவர்களை மன்னரும் ராணியும் சந்திக்க மாட்டார்கள் என்று பெக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்பயணம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்தப் பயணத்தின் போது, குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் அமைப்புகளின் பிரதிநிதிகளை ராணி கமீலா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போர் உள்ளிட்ட விவகாரங்களால் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே சுமுகமற்ற உறவு நிலவி வரும் சூழலில், மன்னரின் இந்தப் பயணம் சவாலான இராஜதந்திரக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பல ஜனாதிபதிகள் மற்றும் மன்னர்களின் ஆட்சிக் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் பிரித்தானியா - அமெரிக்கக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மன்னர் ஒரு தனித்துவமான பங்கினை ஆற்ற முடியும் என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
. சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளியாக கூறப்படும் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















