கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து
இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லதாகவும் பிரிட்டன் பிரதமர் குறிப்பிடார்.
முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரி பிலிப் ரைக்ரோஃப்ட் (Philip Rycroft) அளித்த 17 பரிந்துரைகளில் ஒன்றாக, வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு அமைச்சர்கள் ஆண்டுக்கு 100,000 பவுண்ட்ஸ்கள் என உச்சவரம்பு நிர்ணயித்துள்ளனர்.
அதேநேரம், வெளிநாட்டு நிதியுதவியுடனான இணையவழி அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட ரைக்கிரோஃப்ட்டின் ஏனைய முன்மொழிவுகள் குறித்த தனது பதிலை இங்கிலாந்து அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறது.
அதேவேளை பிரிட்டிஷ் அரசியலில் வெளிநாடுகள் தலையிட முயற்சிப்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், கடந்த ஆண்டு வெளிநாட்டு நன்கொடைகள் குறித்த ஒரு ஆய்வு தொடங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.























