இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படை தளபதி உயிரிழந்தாரா
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தளபதி அலிரேசா தங்க்சிரி (Alireza Tangsiri ) உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த தகவல் தொடர்பில் இதுவரை ஈரான் அரசாங்கம் அல்லது இஸ்ரேல் இராணுவமேத எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை.
பந்தர் அப்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் பதற்றநிலையின் பின்னணியில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், ஈரானின் முக்கிய இராணுவத் தலைவர்களை குறிவைத்து “துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகள்” மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கு முன்பும், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ஹெஸ்புல்லா தளபதிகள், ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மற்றும் ஈராக் ஆயுதக் குழு தலைவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் குறிவைத்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அலிரேசா தங்க்சிரி உயிரிழப்பு தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















