விழுந்து நொருங்கியது அமெரிக்காவின் இராணுவ விமானம் - மீட்புப் பணிகள் தீவிரம்
மேற்கு ஈராக்கின் 'நட்பு வான்பரப்பில்' பறந்து கொண்டிருந்த இரண்டு வானூர்திகள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தின் காரணமாக KC-135 வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது.
எதிரிகளின் தாக்குதல் அல்லது தவறுதலான நட்புப் படைத் தாக்குதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்வில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை தலைமையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது இரண்டு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விபத்துக்குள்ளான வானூர்தியில் இருந்த வீரர்களைக் கண்டறியும் நோக்கில் மேற்கு ஈராக்கில் தற்போது பாரிய மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான 'ஒபரேஷன் எபிக் பியூரி' இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக இந்த வானூர்திகள் எரிபொருள் நிரப்பு சேவைகளில் ஈடுபட்டிருந்தன.
போர் தொடங்கிய பெப்ரவரி 28 முதல் இதுவரை அமெரிக்கா இழந்துள்ள நான்காவது வானூர்தி இதுவாகும்.






















