யாரையும் காயப்படுத்திய வாழ்வு எனக்கு வேண்டாம் - நடிகை த்ரிஷா
சினிமா
த்ரிஷா தன்னுடைய கல்யாண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றும் அதற்கான துணைவனை அவர் இப்படி தான் தேர்ந்தெடுப்பார் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் மனைவி சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அந்த மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷாவை பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டு இருந்தன. இந்த நேரத்தில் விவாகரத்து சர்ச்சையும் ஆறாமல் இருந்தது.
இப்படி இருக்க த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து கல்பாத்தி சுரேஷின் வீட்டு திருமண விழாவில் ஒரே நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.
சர்ச்சைக்கு மத்தியில் இவர்கள் இருவரும் இப்படி நடந்துகொண்ட இந்த விடயம் விஜய் ரசிகர்கள் தொடக்கம் அனைவரையும் கோபமடைய செய்தது. இந்த நிலையில் திருமணம் பற்றி பேசிய நடிகை த்ரிஷாவின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.
த்ரிஷா பேட்டி - 2 016
2016-ம் ஆண்டு த்ரிஷா ஒரு பேட்டியில் பேசி இருந்தார் அதில் “நான் திருமணத்திற்கு முன்னர் எனக்கு கணவராக வரப்போகின்றவரிடம் இவர் தான் என்னுடையவர், அவருடன் தான் இந்த வாழ்க்கையை வாழப்போகிறோம் என நான் உணர வேண்டும்.
ஏனென்றால் எனக்கு விவாகரத்து செய்வது துளியும் நம்பிக்கை இல்லை. திருமணத்திற்கு பின் நான் ஒருபோதும் விவாகரத்து செய்யமாட்டேன்.
விவாகரத்தில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்வதற்கு முன்னர் 100 முறை யோசித்து தான் முடிவெடுப்பேன். நான் வேறொருவரை காயப்படுத்தவோ அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழவோ விரும்பவில்லை.
என்னைச் சுற்றி இருக்கும் பலரும் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர்கள் கொஞ்சமும் சந்தோஷம் இல்லாமல் வாழ்கிறார்கள்.
எனக்கு அப்படியொரு வாழ்க்கை வேண்டாம். திருமணம் இரண்டாவது விஷயம் தான். அதற்கு முதல் எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் நான் அவரை காதலிக்க தொடங்குவேன்.
பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு துணையை நான் நிச்சயம் சந்திப்பேன் . அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்று த்ரிஷா தனது திருமண துணைவர் பற்றி பேட்டியில் கூறிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.






















