மீண்டும் ஆரம்பமான ட்ரம்பின் ஆட்டம் - அடுத்த குறி தென் கொரியா
தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்த்தி அறிவித்து இருக்கிறார் உலக நாடுகள் தனது பேச்சை கேட்கவில்லை என்றால் வரி விதிப்பேன் என அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார்.
பின்னரும் தனது உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தாறுமாறாக வரி விதிப்பு அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிடுவது வழக்கமாகி விட்டது. அந்தவகையில் ட்ரம்பின் பார்வை இன்று தென் கொரியா மீது சென்றுவிட்டது.
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி காட்டி இருக்கிறார்.
இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவிற்கு வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும், ஒப்புக்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைக்கு ஏற்ப எங்கள் வரிகளை குறைப்பதற்காக நாங்கள் விரைவாகச் செயல்பட்டுள்ளோம். நிச்சயமாக, எங்கள் வர்த்தகப் பங்காளிகளும் அவ்வாறே செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தென் கொரியா அமெரிக்காவுடனான தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. 2025ம் ஆண்டு ஜூலை 30ம் திகதி அதிபர் லீயும் நானும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சிறந்த ஒப்பந்தம் மேற்கொண்டோம். 2025ம் ஆண்டு அக்டோபர் 29ம் திகதி நான் கொரியாவில் இருந்தபோது இந்த விதிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.
எங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இன்னும் சட்டமாக்காததால், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றாலும், நான் இதன்மூலம் தென் கொரியாவின் கார்கள், மரக்கட்டைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மற்ற அனைத்து பரஸ்பர வரிகளையும் 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி உள்ளேன் என கூறியுள்ளார்.





















