ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் மங்காத்தா.. 2 நாட்கள் வசூல் விவரம்..
சினிமா
புதிய திரைப்படங்களுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது மங்காத்தா ரீ ரிலீஸ்.
கடந்த 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் டிக்கெட் புக்கிங்கில் மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது. முதல் நாளே மட்டுமே இப்படம் இந்தியளவில் ரூ. 5.50 கோடி வசூல் செய்து, இதுவரை எந்த ரீ ரிலீஸ் படமும் செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களில் அஜித்தின் மங்காத்தா படம் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.























