தலைவர் அவர் தோளை தட்டி கொடுத்து சிரிக்கிறார்...
சினிமா
வாத்தியார் தனி கட்சி ஆரம்பித்து கோவைக்கு போய் 3 நாட்கள் தங்கி இருக்க இயக்கத்தில் அப்பவே வசதி கொண்டவர்கள் சாதாரண தொண்டர்கள் பொறுப்பில் இருக்க...
ஒரு தொண்டர் அண்ணா என்னை மிக பெரும் கட்சி பொறுப்பில் நீங்க நியமித்து இருந்தாலும் ஏழை என்பதால் என்னை மதிக்க மாட்டார்கள் போல எனக்கு தோணுது என்கிறார்... தலைவர் அவர் தோளை தட்டி கொடுத்து சிரிக்கிறார்...
மறுநாள் மாலை கோவை டு சென்னை வாத்தியார் ரயிலில் பயணம்.... எக்கசக்க கூட்டம் அவரை வழி அனுப்ப...
அந்த ஏழை நிர்வாகியும் நிற்கிறார்
என்ன ஒரு பதிலும் சொல்லாம புறப்படுகிறார் என்று மனசு சொல்ல...
ரயில் புறப்பட சில நிமிடங்கள் இருக்கும் போது அந்த தொண்டரை அருகில் அழைத்து அனைவரையும் சற்று தள்ளி நிற்க சொல்லி அவர் தோளில் கை போட்டு கொண்டு அவர் காதில் தொடர்ந்து எதோ சொல்லி கொண்டே போக...
ரயில் புறப்படும் சிக்னல் வர அவரிடம் கை கூப்பி விடை பெற்று தன் கோச்சில் ஏறி விடை பெற....
அந்த ரயில் புறப்பட்டு போன பின் அந்த தொண்டரை சுத்தி கடும் கூட்டம்... என்ன சொன்னாரு தலைவர் உன்னிடம் என்று கேட்க
அவர் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்.
தாங்க முடியாமல் அடுத்த சில தினங்களில் தலைவரை சந்திக்க ஓடி வந்தார்..
வந்தவர் விவரம் தெரிய உடனே அழைத்தார் அதிமுக நிறுவனர்
வாத்தியார்....
என்ன மருதாசலம் மகிழ்ச்சியா உன்னை எல்லோரும் மதித்தார்களா என்று கேட்க...
ஆமாங்க தலைவா ஆனால் நீங்க என்ன என் காதில் சொன்னீங்க என்று பிச்சு எடுத்து விட்டார்கள்... ஆனால்
நீங்க என்ன சொன்னீங்க என்று எனக்கு தெரியவே இல்லை..... மண்டை காயுது சொல்லுங்க என்னதான் சொன்னீங்க..
தலைவர் நான் உன்கிட்ட பேசின மாதிரி நடிச்சேன் சுத்தி இருப்பர்கள் பார்க்கட்டும் என்று சொல்லி குழந்தை போல வாய்விட்டு சிரித்தார்...
அந்த தொண்டருக்கு கோவை மாவட்டம் அதில் பேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டி இட வாய்ப்பும் கொடுத்து அவரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்..
Nellaimani






















