• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு

லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற புனித ஜார்ஜ் விழாக் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.
  
புனித ஜார்ஜ் கொடிகளை ஏந்தி இருந்த சில ஆண்கள் காவல்துறையினருடன் மோதிக்கொண்டதாக காட்சிகள் வெளியாகியுள்ளன. மெட்ரோபொலிட்டன் காவல்துறை வெளியிட்ட காட்சிகளில் இந்த மோதல் தெளிவாகத் தெரிகிறது.

மெட்ரோபொலிட்டன் காவல்துறை முன்னதாக, இந்த நிகழ்வில் தீவிர வலதுசாரி குழுக்கள் மற்றும் வெளிப்புற கால்பந்து கிளப் ரசிகர்கள் கலந்து கொள்ளலாம் என்று எச்சரித்திருந்தது.

"இந்த நிகழ்வுக்காக ரிச்மண்ட் டெரேஸில்(Richmond Terrace) ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குழுவினர் அந்த பகுதியைக் கடந்து ஒயிட்ஹால் நோக்கி சென்றனர்.

காவல்துறையினர் தடுப்பு அமைத்து, குழுவினரை திரும்பச் செல்லுமாறு கேட்டபோது, அவர்கள் வன்முறையாக தடுப்புகளை தள்ளிச் சென்றனர். குதிரைகளில் வந்த காவல்துறையினர் தலையிட்டு பாதுகாப்பை மீண்டும் நிலை நிறுத்தினர்.

" மேலும் கலவரத்தில் இருந்து குறைந்தது 6 பேரை கைது செய்து இருப்பதாகவும் "இந்த சம்பவத்திற்குப் பிறகு எந்த தொடர் கலவரங்களும் இல்லை" என்று மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

புனித ஜார்ஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இது இங்கிலாந்தின் பாதுகாவலர் புனித ஜார்ஜை கௌரவிக்கும் நாள் ஆகும். 
 

Leave a Reply