• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர்

இலங்கை

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.  சார்லஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான பிரச்சினையாக காணப்படுகின்றது. போதைப்பொருள் பாவனையால் பெண்கள் நாளுக்கு நாள் சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பதிலாக இளைஞர்கள் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களின் திறமைக்கு களம் அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் வடமாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் கலாசார திணைக்களம் இணைந்து கிராமிய மட்டத்தில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அழிக்கும் போதைப்பொருளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கௌரவ ஆளுநர் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply