• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விசேட நடவடிக்கை

இலங்கை

பதுளை, எல்ல, கரந்தகொல்ல பிரதேசத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தப் பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 10 நாட்கள் தேவைப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு நிலைமை அதிகரிக்கும் பட்சத்தில் எல்ல – வெல்லவாய வீதி பாதிப்படையக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

எனவே, அதனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ள பிரதேசத்தில் நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டத்தினால் குறித்த பகுதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே, எல்ல வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதி தொடர்பிலான அறிக்கை இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் இந்த அறிக்கையினூடாக வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply