• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் தேடப்படும் குற்றவாளி - தகவலுக்கு $100,000 சன்மானம்

கனடா

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. “கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.
  
இந்த துப்பாக்கி சூடு டான்ஃபோர்த் மற்றும் கார்லாவ் அவென்யூ(Danforth மற்றும் Carlaw avenues) பகுதியில் நடந்தது.

அப்போதிலிருந்து, காவல்துறை குற்றவாளியான 35 வயதான மைக்கேல் பீபீ-யை (Michael Bebee) தீவிரமாக தேடி வருகிறது.

இந்நிலையில் டொராண்டோ காவல்துறை, போலோ திட்டத்துடன் இணைந்து, கனடாவின் தேடப்படும் குற்றவாளியான மைக்கேல் பீபீ-யை கைது செய்வதற்கான தகவலுக்கு பெரும் தொகையை வெகுமதியாக அறிவித்துள்ளது.

போலோ திட்டம் என்பது சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான குற்றவாளிகளைக் கைது செய்ய எடுக்கப்படும் முயற்சியாகும்.

அந்த வகையில் ஏப்ரல் 23ம் திகதி டொராண்டோ காவல்துறை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், கனடாவின் தேடப்படும் 25 குற்றவாளிகளின் தகவலுக்கு $1 மில்லியன் மொத்த வெகுமதியைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது..

"Shamar-ன் மரணம் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது," என்று TPSக்கான செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அவரது கொலையாளியை நீதிக்கு கொண்டு வருவதற்கும், அவரது குடும்பத்தினருக்கு சிறிது ஆறுதல் அளிப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply