• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் உக்ரைன் அதிபர் பெயர்

ஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பெயர் இருப்பதுடன் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உக்காரைன மது ராசயா ஆரம்பித்த யுத்தம் 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதுடன்  உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளை ட்ரோன்கள் தாக்கி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன்  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். கார்கிவ் பிராந்திய ஆளுநர் சினி ஹுபோவின் கூற்றுப்படி, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

கீழே விழுந்த ட்ரோன்கள் பெரும் தீயை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீது ரஷ்யா கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது.

ரஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் இவரும் உள்ளார். ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய உள்துறை அமைச்சரின் தகவலின்படி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் தேடப்படும் பட்டியலில் உள்ளார். எனினும், வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Leave a Reply